தளபதியின் சம்பளம் ₹1.2Billion
- Thalapathy.in
- Aug 20, 2021
- 1 min read
கடந்த சில வருடங்களாகவே விஜய்யின் சினிமா மார்க்கெட் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. 'மாஸ்டர்' படத்துக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் தளபதி 66 படத்திற்கு அவருக்கு 120 கோடி ( சம்பளம் கொடுக்கவுள்ள செய்திதான் தென் இந்திய சினிமாவையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு மொழிகளில் படம் வெளியாக உள்ளதால் தமிழுக்கு 80 கோடி தெலுங்குக்கு 40 கோடி என 120 கோடி ரூபாய்(₹1.2 பில்லியன் ) ($16.1 Million USD ) சம்பளத்துக்கு இந்தப்படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

அவரது படங்களும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் சீராக வசூல் செய்ய ஆரம்பித்தன. அதேபோல் தற்போது விஜய்யின் ஒரு படம் வெளியானால் தென்னிந்தியாவில் மட்டும் 200 கோடி வசூல் செய்யும் அளவுக்கு தன்னுடைய மார்க்கெட்டை பலப்படுத்திவிட்டார் விஜய். இனிமேல் இந்த வசூல் குறைய வாய்ப்பே கிடையாது.
அப்படி இருக்கையில் அடுத்த படமான தளபதி 66 படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார் விஜய். மேலும் அந்த படம் மலையாளம், கன்னடம், ஹிந்தி என மற்ற மூன்று மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
தெலுங்கு சினிமாவின் முக்கிய இயக்குநரான வம்சி 'தோழா' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். வம்சியின் லேட்டஸ்ட் படமான 'மஹரிஷி' பெரும் வெற்றி பெற்ற படம். மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே நடித்த இப்படத்துக்கு கடந்த ஆண்டு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Comments